2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கரித்தாஸ் எகெடினால் சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவி

Super User   / 2013 ஜனவரி 03 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினால் 70 சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களின் சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயம், மீன்பிடி ஆகிய தொழில்களை மேற்கொள்வதற்க்கான கடனுதவி இன்று வியாழக்கிழமை  பகல் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் டயக்கோணியா சுவீடன் நிறுவகத்தின் நிதி அனுசரைனயுடன் மண்முனை மேற்கு பிரதேசத்தில் செயற்படுத்தப்பட்டுவரும் ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கும் குழுக்களுக்கே இந்த கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தலா 17,000 ரூபாய் வீதம்  பெறுமதியாக  பதினொரு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய்  வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .