2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கல்வி அதிகாரிகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான விசேட கூட்டம் நேற்று காலை இடம்பெற்றது.

பாடசாலைக்கு நிரந்தர அதிபரை நியமிக்க வேண்டும், இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு  ஆசிரியர்களையும் மீளப்பெற்றுத் தரவேண்டும் என்று கூறி இப்பாடசாலையின் ஆசிரியர்களில் 14 ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தலைமையிலான கல்வி அதிகாரிகள் குழு நேற்று வியாழக்கிழமை காலை ஸாஹிர் மௌலானா வித்தியாலத்திற்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடி அங்குள்ள குறைநிறைகளைக் கேட்டறிந்தனர்.

ஆசிரியர்களின் ஒழுங்கின்மை உட்பட தாம் இனங்கண்ட சுமார் ஒன்பதுக்கு மேற்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டிய பெற்றோர் தற்போதுள்ள பாடசாலை நிர்வாகத்தை உடனடியாக மாற்றி புதிய அதிபர் உட்பட புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தித் தருமாறும் இல்லையேல் நிர்வாகத்தை மாற்றும் வரை தமது போராட்டம் ஆரப்பாட்டமாகத் தொடரும் என்றும் எச்சரித்தனர்.

இதுவிடயமாக உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாக கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை இதன்போது உறுதியளித்தார்.

எனினும் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஆசியரியர் சுகயீன லீவுப் போராட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு பெற்றோர் இனிமேல் ஊக்கமளிக்கக் கூடாது என கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .