2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

மூன்று பிள்ளைகளின் தந்தை கடலில் மூழ்கி பலி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உல்ஹிடியாவ பகுதியைச்சேர்ந்த ஒருவர் அலைய அடித்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வென்னப்புவ தலைமையகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிழக்கு வென்னப்புவ, கொலஞ்சடிய, இலக்கம் 51 A இல் வசிக்கும் 66 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையானகண்ட முதலிகே கனுட் ஹப்புஹாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மூன்று குழந்தைகளின் தந்தையான இவர் வென்னப்புவ, உல்ஹிடியாவமீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளைஅகற்றி படகுகளை கரைக்கு கொண்டுசெல்ல உதவுவதன் மூலம் குறித்த நபர் சிறிது பணம் சேகரித்து வந்தார்.

குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (14) அன்று வலைகளைக் கழுவுவதற்கு மணல் இல்லாத தண்ணீரைப் பெறுவதற்காக கடலுக்கு சென்ற நிலையில் திடீரென அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X