2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவனுக்கு பிணை

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 ​ஆம் ஆண்டு மாணவன் ஒருவரை  ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான்  திங்கட்கிழமை (13)  அன்று உத்தரவிட்டார்.

குறித்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வரும் முதலாம் ஆண்டு மாணவி மீது கடந்த 09.10.2025  வியாழக்கிழமை இரவு 9.45 மணி அளவில் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவன் விடுதி பகுதியில் வைத்து கன்னத்தில் அறைந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து   மாணவியின் கன்னத்தில் அறைந்த தாக்குதல் நடத்திய பொலன்னறுவையை சேர்ந்த மாணவனை  திங்கட்கிழமை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மாணவனை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (03) ஆஜர்படுத்திய அதையடுத்து நீதவான் அவரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டனை பிறப்பித்து உத்தரவிட்டார்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X