2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் வேளான்மை நடவடிக்கை தீவிரம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


சீரான கால நிலையைத் தொடர்ந்து மட்டக்களப்பில் வேளான்மை நடவடிக்கைகள் சுமூகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வந்தது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இருபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியிருந்தன.

கடந்த இரு நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சீரான கால நிலையைத் தொடர்ந்து விவசாயிகள் வேளான்மை அறுவடையினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலைப்பிரதேசங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் வயல் நிலங்களுக்கான போக்குவரத்தும் சீறடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--