2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

முன்னாள் புலிகள் ஐவர் கிழக்கில் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பில் வாகரை மற்றும் வாழைச்சேனை  ஆகிய பிரதேசங்களில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும்  ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரே இவர்களை,  விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

தங்களுடைய உறவினர்கள்  கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்கள்  சிலர் நேரிலும் தொலைபேசி ஊடாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மீண்டும் கைதுசெய்து விசாரணைக்கு என்று  அழைத்துச் செல்வதை நியாயமான செயல் என கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இப்படியான நெருக்கடிகள் ஏற்படும்போதுதான் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

இரு வாரங்களுக்கு முன்னர் மூதூர் பிரதேசத்திலும் 6 பேர் இவ்வாறு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0

  • aj Tuesday, 19 February 2013 07:31 AM

    புலி பெயரை வைத்துகொண்டு வேண்டியதை செய்யங்க. ம்ம்ம் காலம் மாறும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--