2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சிசுவை புதைத்த தாய் சந்தேகத்தில் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பிரசவித்த சிசுவை குழியில் போட்டுப் புதைத்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்தக் குழந்தையின் தாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்குப் பின்னால் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே (வயது 22) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

இவரது கணவர் தற்போது சவூதி அரேபியாவில் தொழில் வாய்ப்புக்காகச் சென்றுள்ளார் எனவும்  கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணின் தாயும் தந்தையுமே இந்த சிசுவைப் புதைப்பதில் இரகசியம் பேணுவதற்கு உதவியதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X