2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வெருகலில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டனர்

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெருகல் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதன்முறையாக டெங்கு நோயாளிகள் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் தலைநகர் கொழும்பில் வேலை செய்பவர்கள் என்றும் விடுமுறையில் இவர்கள் தமது சொந்த இடமான வெருகல் பிரதேசத்திற்கு திரும்பியிருந்த வேளையிலேயே இவர்களுக்கு டெங்கு நோய் பீடித்திருப்பது
கண்டறியப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .