2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

உகந்தையோடு பின்வாங்கிய யாத்திரீகர்கள்

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து  60 தினங்கள் பயணித்து உகந்தைமலை முருகன் ஆலயத்தை அடைந்த காதிர்காம பாதயாத்திரீகர்கள் பலர்  உகந்தையோடு பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான கதிர்காம பாதயாத்திரைக் குழுவிலிருந்த பக்தர்கள் சிலரே இவ்வாறு உகந்தை முருகன் ஆலயத்துடன் தமது பயணத்தை நிறைவுசெய்துகொண்டுள்ளனர். 

கதிர்காம கந்தன் ஆலய உற்சவமானது ஒரு மாதம் பிற்போடப்பட்டமையே இதற்கு காரணமென பாதயாத்திரீகர்கள் தெரிவித்துள்ளனர்.

6 நாட்கள் காட்டுப் பயணத்திற்காக 16 தினங்கள் உகந்தையில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--