2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சைவ சித்தாந்த செயலமர்வு

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர் கான்


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட சைவ சித்தாந்த செயலமர்வை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலசார மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து இளைஞர் பேரவை தலைவருமான சி.யோகேஸ்பரன், மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 14ம் திகதி ஆரம்பமான இந்த செயலமர்வு தொடர்ந்து 10  நடைபெற்று நேற்று புதன்கிழமை நிறைவு பெற்றது.இந்த செயலமர்வில் பாடசாலைகளில் இந்து நாகரீகம் கற்பிக்கும் ஆசிரியர்கள், சைப்புலவர்கள், அறநெறி பாடசாலைகளின் ஆசிரியைகள், ஆலய தர்மகர்த்தாக்கள் என சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--