2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறுவர் மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்;டில் கலந்துகொண்டு விட்டு நாடு திரும்பிய காத்தான்குடியைச்சேர்ந்த முகம்மட் லாபீர் பாத்திமா நிபாசத் எனும் மாணவிக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மாணவி கல்வி கற்று வரும் காத்தான்குடி மீராபாலிகா மாகா வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (24) இந்நிகழ்வு  இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எம்.இஸ்மாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு வைபவத்தில் காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.சுபைர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ரி.ஹாலித், அதன் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.றமீஸ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த மாணவி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஜப்பான் நாட்டின் புகாகோ நகரத்தில் கடந்த 14.7.2013 தொடக்கம் 22.07.2013 வரை நடை பெற்ற ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் இலங்கையிலிருந்து கடந்த ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற ஆறுமாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மேற்படி காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவி முகம்மட் லாபீர் பாத்திமா நிபாசத் மற்றும் யாழ்ப்பானம் இந்துக் கல்லூரியை சேர்ந்த பாலேந்திரன் அபிராம் ஆகிய இரண்டு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் உட்பட நான்கு சிங்கள மாணவர்கள் அடங்களாக ஆறு மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .