2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தி பிரிவு உதவி முகாமையாளராக அஹமதுலெப்பை நியமனம்

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி  பிரிவு உதவி முகாமையாளராக ஜே. அஹமதுலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 60 முதற் தடவையாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 35 வருடங்களாக உற்பத்தி முகாமையாளராகப் பணியாற்றியவரே உற்பத்திப் பிரிவுக்குப் பொறுப்பான ஆலை உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கடந்த ஜுலை 14 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது.முன்னர் தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனமாக இயங்கி வந்த இந்த காகித உற்பத்தித் தொழிற்சாலை பின்னர் தேசிய கடதாசிக் கம்பனியாக பெயர் மாற்றம் பெற்றது.

தற்சமயம் வாழைச்சேனை தேசிய கடதாசிக் கம்பனியில் நிரந்தர ஊழியர்களாக 165 பேரும் தற்காலிக அடிப்படையில் 62 பேரும் கடமையாற்றுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .