2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பிரத்தியோக வகுப்புக்கள் இடம்பெறும் இடங்கள் பார்வை

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் பிரத்தியோக வகுப்புக்கள் இடம்பெறும் இடங்களை வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையிலான குழுவினர் நேற்று சென்று பார்வையிட்டனர்.

இதன்போது ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினங்களிலும் மற்றும் இரவு நேரங்களிலும் பிரத்தியோக வகுப்புக்கள்
நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பிரத்தியோக வகுப்பு இடம்பெறும் இடங்களில் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் சுற்றுச் சூழல் விடயங்கள் தொடர்பாகவும் பிரத்தியோக வகுப்பு உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இக்குழுவில் பிரதேச செயலாளருடன் நன்னடத்தை உத்தியோகத்தர் ஆர்.விக்னேஸ்வரன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜ், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .