2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் பௌத்த தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதலை நகரசபை வன்மையாக கண்டித்துள்ளது.

காத்தான்குடி நகரசபைக் கூட்டம் நேற்று  வியாழக்கிழமை நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றபோது இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கண்டனத் தீர்;மானத்தை நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சபையில் முன்மொழிந்தார் இத்தீர்மானத்தை காத்தான்குடி நகர சபை ஏகமனதாக அங்கீகரித்தது.

கண்டன தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீது பௌத்த தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலை நடாத்தி வருகின்றனர். இந்த புனிதமான றமழான் மாதத்திலும் கூட மஹியங்கனை பள்ளிவாயல் மீது தாக்குதல் நடாத்தியதுடன் அப்பள்ளிவாயலையும் மூடிவிட்டுள்ளனர்.

அத்தோடு இறைச்சி லொறியொன்றையும் பௌத்த தீவிரவாதிகள் நெருப்பு வைத்து தீக்கிரையாக்கியுள்ளனர்.

இவ்வாறு முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத்தளங்களான பள்ளிவாயல்கள் மீது தொடாச்சியாக நடாத்தப்பட்டுவரும் தாக்குதலை காத்தான்குடி நகரசபை வன்மையாக கண்டிப்பதுடன் இதன் பின்னணியில் செயற்பட்டுவருபவர்களை அரசாங்கம் உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இச்சம்பவங்கள் இடம்பெறுவதை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இவ்வாறான சம்பவங்களினால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்களை அரசாங்கம் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X