2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பெரிய குளம் பகுதியில் மனித எலும்புக் கூடு மீட்பு

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல், ரவீந்திரன்


மட்டக்களப்பு, பெரியபோரதீவு கிராமத்தில் அமைந்துள்ள பெரிய குளம் பகுதியில்   மனித எலும்புக் கூடு இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் வழங்கிய தகவலினைத் தொடர்ந்து இவ் எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது.

கோவில் போரதீவு கிராமத்தினைச் சேர்ந்த பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் தங்கராசா போரானந்தம்  வயது 60 என்பவர் கோவில்போரதீவு கிராமத்திலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று போது கடந்த மார்ச் மாதம் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால்; பொஸிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூடு  இவருடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X