2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ரூபி கிராம மக்களுக்கு கிணறுகள்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் உள்ள ரூபி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட கிணறுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

ரூபி கிராமத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் குடிநீர் மற்றும் இதர பாவனைகளுக்கு முதற்கட்டமாக 70  கிணறுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானாவின் முயற்சியினால்  தார் - அல் - பிர் அஸோஸியேசன் நிதியுதவியில் இந்தக் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா இந்தக் கிணறுகளை பொதுமக்களிடம் கையளித்தார்.

நேயம் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதியும் மட்டக்களப்பு இளைஞர் நாடாளுமன்றப் பிரதிநிதியுமான ஐ.எம்.சஜீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--