2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

உற்பத்தி பொருள் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூலை 30 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்கள் தோறும் பெண்களினால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களின்; கண்காட்சியொன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இக்கண்காட்சியினை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.வாசுதேவன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சும், இலங்கை பெண்கள் பணியகத்தின் அனுசரணையிலும்; நடைபெறும் இக்கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் பிரதேச செயலாளர்களான திருமதி எஸ்.தினேஸ், திருமதி வி.சிவப்பிரியா, எம்.ஹனிபா, எஸ்.ராகுலநாயகி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் கே.குணரட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பெண்களின் மேற்கொள்ளப்பட்டுவரும் உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--