2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

வாழ்வாதார தொழில் உபகாணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்

மட்டக்களப்பு ஏறாவூர் சமூர்த்தி வங்கி பயனாளிகளுக்கு வாழ்வாதார தொழில் உபகாணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹளிபா இப் பொருட்கனை பயளாளிகளிடம் கையளித்தார்.

வங்கி முகாமையாளர் ஏ.எம். நிஹாறா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எப்.ஆர்.பரீட், கருத்திட்ட முகாமையாளர் ஏ.சி.இஸட் பௌமி, கிழக்கு வங்கி முகாமையாளர் எம்.ஜ.இஷ்ஹாக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

சிறு கைத்தொழில், மீன்பிடி குடிசைக் கைத்தொழில் போன்ற தொழில் துறைகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இங்கு கையளிக்கபட்டன.

சமூர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் சுழற்;சி முறையிலான கடன் திட்ட அடிப்படையில் இவ்வுபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 26 பயணாளிகள் இதன்போது தொழில் உபகரணங்களைப் பெற்றுகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .