2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களின் விரிவுரைகள் ஆரம்பம்.

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்குப் பல்கலைக்கழக 2011/2012 ஆம் கல்வியாண்டுக்கு விஞ்ஞான மற்றும் கலை கலாசார பீடங்களுக்கு அனுமதிக்கபபடடுள்ள 1 ஆம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் 14.08.2013 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் கே.மகேசன் அறிவித்துள்ளார்.

விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மேற்படி பீடத்தினைச் சார்ந்த மாணவர்கள் தத்தமது விடுதிகளுக்கு தங்களது பீடங்களின் விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதிக்கு முதல் நாள் (13.08.2013) அன்று பி.ப 05.00 மணிக்கு முன்னர்; கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்குச் சமூகமளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனார்.

மேலதிக விபரங்களுக்கு  பீடாதிபதி/  விஞ்ஞான பீடம்: 065- 2240528, பீடாதிபதி/ கலை கலாச்சார பீடம் : 065 -2240165,  சிரேஷ்ட உதவிப் பதிவாளர்/பரீட்சைகள் : 065-2240584 , உதவிப் பதிவாளர்/மாணவர் நலன்புரிச்சேவைகள்  : 065-2240731 ஆகிய இலங்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X