2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கல்லாப்பெட்டியிலிருந்த பணம் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மரத்தளபாடங்களை வாங்குவதுபோன்று பாசாங்கு செய்துகொண்டு வந்ததாகக்; கூறப்படும் ஒருவர் கல்லாப்பெட்டியிலிருந்த  பணத்தை திருடிச் சென்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரிலுள்ள மரத்தளபாட விற்பனை நிலையமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த இருவர், மரத்தளபாடங்களை வாங்குவதுபோன்று  பாசாங்கு செய்துகொண்டு மரத்தளபாடங்களை காட்டுமாறு மரத்தளபாட விற்பனை நிலைய உரிமையாளரை கேட்டுள்ளனர்.

இந்த மரத்தளபாட விற்பனை நிலைய உரிமையாளர் இவர்களில் ஒருவரை அழைத்துச்சென்று மரத்தளபாட விற்பனை நிலையத்திலுள்ள மரத்தளபாடங்களை காண்பித்துக் கொண்டு நின்றபோது, மற்றைய நபர் கல்லாப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த 64,000 ரூபாவை திருடிக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் குறித்து இந்த மரத்தளபாட விற்பனை நிலைய உரிமையாளர்  ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, ஏறாவூரைச் சேர்ந்த மௌலவியொருவரின் மோட்டார் சைக்கிளை திருடர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்த மௌலவி ஓட்டுப் பள்ளிவாசலில் றமழானின் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோதே இவரது மோட்டார் சைக்கிள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X