2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கல்லடி பாலத்திலிருந்து குதித்த யுவதி காப்பாற்றப்பட்டார்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்த யுவதியை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாரே குறித்த யுவதியை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த பெண் மாலை 05 மணியிலிருந்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அவரை பொலிஸார் அவதானித்துக்கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையிலேயே அவர் பாலத்திலிருந்து திடீரென ஆற்றுக்குள் குதித்துள்ளார். விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

தாழங்குடா பிரதேசத்தினை சேர்ந்த  28 வயதான பூபாலப்பிள்ளை மோசகலா என்பவரே இவ்வாறு  காப்பாற்றப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X