2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

நடமாடும் மின்சார சேவை

Super User   / 2014 மார்ச் 25 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளைப் பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடமாடும் மின்சார சேவை தி;ங்கட்கிழமை (24) பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இதன் போது  மின் இணைப்புக்கான படிவங்கள் ஏற்றுக்கொள்ளல், புதிய மின் இணைப்புக்கள் வழங்கல் மின் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள், மற்றும் மின்சார சேவை தொடர்பான ஏனைய பிரச்சனைகளுக்கான தீர்வு வழங்கப்பட்டன. இந்த சேவைகளை இப்பிரதேசத்தினைச் சேர்ந்த 150 இற்கும்  மேற்பட்ட மக்கள் பெற்றுக்கொண்டனர்.

இதில் மட்டக்களப்பு பிரதேச  மின் பொறியிலாளர் திருமதி அனிதா பரமானந்தம், பிரதேச பராமரிப்பு மின் பொறியிலாளர் என்.தேவரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை களுவாஞ்சிகுடி மின்சாரசபை அத்தியட்சகர் கே.அனுசாந்தன் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .