2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை தொடர்பான 02 நாள் செயலமர்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பமாகியது, 

மட்டக்களப்பு மருத்துவச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய இச்செயலமர்வு தாதியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் நடத்தப்படுகின்றது.
தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தினி பெரேரா,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் அமில ரத்நாயக்கா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜே.நவரட்ணராஜா, மட்டக்களப்பு மருத்துவச் சங்கத்தின் செயலாளர் டாக்டர் வித்தியாசாகரண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக எரிகாயங்களுடன்  வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக  வருகின்றவர்களுக்கான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை தொடர்பில் இச்செயலமர்வில் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென மட்டக்களப்பு மருத்துவச் சங்கத்தின் செயலாளர் டாக்டர் வித்தியாசாகரண் தெரிவித்தார்.

புதன்கிழமை (02) தாதியர்களுக்கான செயலமர்வு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .