2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


சமய சகிப்புத்தன்மை, முரண்பாடுகளுக்கான அகிம்சை சார் தீர்வு,  சமூக உரையாடல்,  சமய மற்றும் இனப் பன்மைத்துவம் மற்றும் வன்முறையெதிப்பு ஆகிய சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தி, சகல மக்களும் சமத்துவத்துடன் வாழும் ஆர்வத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம் மிகவும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியாலாளர் மன்றம் அமுல்படுத்தியது. இதன்போது, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 20 கிராமங்களில் இச்செயற்றிட்டம் மக்களின் அவதானத்தை ஈர்த்துள்ளது. சுமார் 7000 மக்கள் இந்த அரங்கச் செயற்பாடுகளில் நேரடியாகப் பங்குபற்றியதுடன் சமய சகிப்புத்தன்மை தொடர்பான விழுமியங்களை உருவாக்குவதில் பங்களிப்பும் செய்துள்ளனர். மேலும் குறைந்த பட்சம் மேலும் 7000 பேர் இந்த அரங்கங்களில் உள்ள விழுமியங்கள் பற்றி அறிந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் வசிக்கும் 24  சிங்கள, தழிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் ஆக்கத்திறன், புத்தாக்கச் சிந்தனை மற்றும் வெளிப்பாட்டு இயலுமை என்பனவற்றுக்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு, வன்முறைக் கலாசாரத்தை நிராகரிக்கும் செயற்பாட்டாளர்களாவதற்கான பயிற்சியினையும் பெற்றுள்ளனர். 

செயற்றிட்டத்தின் முதல் அங்கமாக, தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மக்கள் அரங்கச் செயற்பாடு தொடர்பான நிபுனத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சிக்காலத்தின் போது, இவர்கள் 20 மக்கள் அரங்கப் பிரதிகளின் ஆரம்ப வரைவுகளை பூர்த்திசெய்திருந்தனர். இவையாவும் வன்முறையை நிராகரிப்போம், உரையாடலை ஊக்குவிப்போம் எனும் பிரதான தலைப்பின் கீழ் அமைந்திருந்தன. சமயங்களுக்கு எதிராக தலைதூக்கியுள்ள மதசகிப்புத்தன்மையற்ற நிலையினை அகிம்சையால் கையாழும் இயலுமையை மக்கள் அரங்கதின் வாயிலாக பெற்றுக்கொடுக்கும் உத்திகள் பற்றியும் ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டன.

பின்னர், இரண்டாவது கட்டத்தின் போது, இளைஞர் யுவதிகள் தமது மக்கள் அரங்கப் பிரதிகளை இரு மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட 20 கிராமங்களில் நடித்துக்காட்டினர். இதன்போது, மக்கள் அரங்கப் பிரதிகளில் உருவாக்கப்பட்டிருந்த முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைக்குரிய அம்சங்களை அகிம்சை வழியில் தீர்ப்பது தொடர்பில் பொது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. சகல இடங்களிலும் பொது மக்கள் தமது மாற்றுக்கருத்துக்களை நடிப்பின் வாயிலாகவும் வெளிப்படுத்தினர். இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் மேற்கொண்ட மதிப்பீட்டின் போது, அரங்குகளில் கலந்து கொண்டோருள் குறைந்தது 80 வீதமானவர்கள் இது போன்ற அரங்குகளில் சமய சகிப்புத் தன்மை தொடர்பில் எடுத்துக்கூற வேண்டிய கருத்துக்கள இருப்பதாகக் குறிப்பிட்டுளளர். அதேநேரம், 75 வீதமானவர்கள் இது போன்ற மக்கள் அரங்கச் செயற்றிட்டத்தில் நேரடியாக இடம்பெற்று, பங்களிப்பு நல்கும் ஆர்வத்தினை வெளிப்படுத்தினர். இது சமய சகிப்புத்தன்மை தொடர்பில் மக்களை மையப்படுத்திய செயற்றிட்டங்கள் இன்னும் இடம்பெற வேண்டியதையே எடுத்துக்காட்டுகின்றன.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, கிழக்கு மாகாணக் கல்வி, கலாசாரம், காணி மற்றும் காணியபிவிருத்தியமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்தோடு, துருவம் வலையமைப்பு இத்திட்டத்திற்கான கள ஒருங்கிணைப்பினை வழங்கியது. 

வன்முறைக் கலாசாரத்தை நிராகரித்து, முரண்பாடுகளுக்கு அகிம்சை முறையில் தீர்வுகாண்பதற்கான விழுமியங்களை தாக்கமாகவும் கலைத்துவத்துடனும் வெளிப்படுத்தும் ஆற்றல்களைப் பெற்றிருப்பது இத்திட்டத்தின் முக்கியமான அடைவுகளில் ஒன்றாகும். இனம், மதம் போன்ற பிரத்தியேக அடயாளங்களுக்குள் ஏனைய சமூகங்களையும் உள்வாங்கிக் கொள்ளும் அதேநேரம், சகல இன, மத அடயாளங்களையும் இலங்கையர்கள் எனும்  ஐக்கிய அடயாளத்திள் உள்வாங்க வேண்டும் என்பதையும் இளைஞர்கள் எடுத்துக்கூறினர். வன்முறையெதிர்ப்பு செயற்பாட்டாளர்களாக  (யுஉவiஎளைவள) இவர்கள் நிலைமாற்றம் பெற்றிருப்பது சமய சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்கான புதிய குழுவினர் உருவாகியிருப்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

வன்முறைக் கலாசாரத்தை ஒழித்து சமூக உரையாடலை ஊக்குவிப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய உத்தி தொடர்பாக இந்த செயற்றிட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளின் அரங்குகள் அரங்குகள் ஆழமாகப் பேகின. இலங்கையர்கள் என்று சிந்திக்கும் போது, சிங்களவர்களின் அடையாளத்திலிருந்து முஸ்லிம்களையோ முஸ்லிம் அடளாயத்திலிருந்து சிங்களவர்களையோ பிரிக்க முடியாது. அதேபோன்று, தமிழர் அடயாளம் என்பது இந்த நாட்டில் இலங்கையர்களாக வாழும் சகலரதும் அடயாளமாகும். இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களின் இன மத அடயாளங்களுக்கு இத்தகைய மதிப்புடைமையை வழங்கும் போது வித்தியாசங்களுடன் கூடிய ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவது இலகு என்பதையும் அரங்குகள் எடுத்துக்காட்டின.

இந்த அரங்கேற்றத்தின் போது பல சமூகப் பிரச்சினைகள் மக்களிடமிருந்து வெளிக்கிளம்பின. சிங்கள, தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் யுத்தம் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்து, அச்சமூகங்களுக்கிடையிலான உறவுநிலை மெல்லிதாக  வளர்ச்சியடைந்து வந்தபோதிலும் சமூகங்களின் தனித்துவம் - இன, சமய பல்வகைமை தொடர்பில் பரஸ்பரம் புரிதலற்ற நிலை இருப்பது எடுத்துக்காட்டப்பட்டது. சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரை, மொழியடிப்படையில் மிகவும் நெருக்கமான உறவுநிலை காணப்பட்டாலும் சமய இன வித்தியாசங்கள் மீதான புரிதலில் தொடர்ச்சியான வரட்சிநிலை உள்ளதை மக்கள்தாமாகவே எடுத்துக்காட்டினர். தாம் தனித்துவமானவர்கள் ஆனால், ஏனைய சமூகத்தினர் விட உயர்ந்தவர்கள் எனக் கருதுகின்ற நிலை மூன்று சமூகங்களுக்குமுரிய பொதுவான பிரச்சினையாக உள்ளது. இது எந்த ஒரு சிறிய முரண்பாடும் வன்முறையாக நிலைமாறுவதற்கான சூழ்நிலை இருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

மக்கள் இயல்பில் கொண்டும் கொடுத்தும் வாழும் இயலுமையுடன்தான் வாழ்கின்றார்கள். சகல மத இனப் பின்ணனியைக் கொண்டவர்களையும் மனிதர்களாக மதித்து ஏற்புடைமை வழங்கும் ஆர்வம் சகலரிடமும் உண்டு. ஆனால் இந்த ஆர்வம், சிறிய முரண்பாடுகளின்போது மறைந்து விடுகின்றது. யாருடன் முரண்பாடு ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து இனவாத மதவாத சிந்தனைடன் முரண்பாடுகளைக் கையாளும் ஆர்வம் மேலோங்குவதை மக்கள் அரங்குகளின் போது பொதுமக்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் தெளிவுபடுத்தின. கிழக்கு மாகாணத்தில் சமய ரீதியாக அடக்குமுறைகள் ஒரு முக்கியமான பிரச்சினையாக இல்லாவிட்டாலும் சமய இன அடயாளங்களுக்கு மதிப்பளித்தல், அவற்றுக்கான ஏற்புடைமைய வழங்குதல், பல்வகைமையில் ஈடுபடுதல் ஆகியவற்றில் அதிகப்படியான செயற்பாடுகள் தேவைப்படுதை மக்கள் அரங்குகள் ஏடுத்துக்காட்டின.

அகிம்சை, சமத்துவம், சமாதானத்தை கட்டியெழுப்பல் மற்றும் சமயங்களுக்கிடையிலான பன்மைத்துத்தை எடுத்துக்கூறுதல் அகியவற்றில் பெண்களின் வகி பங்கு மிகவும் முக்கியமானது என்பதும் பெண்கள் முக்கிய பங்காளிகளாகக் கருதப்பட வேண்டும் என்பதற்குமான நிலைப்பாட்டை இத்திட்டத்தின் பயிற்சிகள் மற்றும் அரங்கேற்றம் என்பன எடுத்துக்காட்டின. இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 8000 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 85 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள். பல இடங்களில் வருகை தந்திருந்த பார்வையாளர்களுள் 95 வீதமானவர்கள் பெண்களாவர். இத்திட்டத்தின் அடைவுகளை ஊடகவியலார்களுக்கு விளக்கும் சந்திப்பொன்று அண்மையில் கல்முனை பரடைஸ் விடுதியில் இடம்பெற்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .