2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நடமாடும் உணவு வாகனம் கைப்பற்றப்பட்டது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் மக்கள் சுத்தமான உணவுப்பொருட்களை பெற்றுகொள்ளும் வகையில் பொதுச்சுகாதார பிரிவினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் உணவு விற்பனையில் ஈடுபட்டுவரும் நடமாடும் விற்பனையாளர்களின் வாகனங்களில் உணவு கொண்டுசெல்லப்பகடும் விதம் உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சுகாதார சான்றிதல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன்படி கல்லடி,உப்போடை,நொச்சிமுனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு பொருட்களை  கொண்டுசென்ற நடமாடும் உணவு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வாகனத்தில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டவர் சுகாதார சான்றிதழையும் பெற்றிருக்கவில்லையென கல்லடி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

குறித்த விற்பனை வண்டிக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அதில் கொண்டுசெல்லப்பட்ட பெருமளவான உணவுப்பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதேசத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .