2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

வர்த்தகர்களுக்காக இலத்திரனியல் விளம்பரப் பலகை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
, தேவ அச்சுதன்

மட்டக்களப்பு வர்த்தகர்களின் நன்மை கருதி  காந்தி சதுக்கத்தில் பொருத்தப்பட்ட இலத்திரனியல் விளம்பரப் பலகையை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஞாயிற்றுக்கிழமை (06) திரைநீக்கம் செய்துவைத்தார். 

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டிலும் ஆசிய பவுண்டேஷன் ஊடாக கொய்கா நிறுவனத்தின் ஒரு மில்லியன் ரூபா செலவிலும் இந்த விளம்பரப்பலகை அமைக்கப்பட்டது.

இந்த விளம்பரப்பலகை  8 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டதாக உள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய பவுண்டேஷனின் பிரதிச் சபை பிரதிநிதி ஜோகான் ரொபட்,  வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், வரியிறுப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .