2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர் மீது வைத்தியர் தாக்குதல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மட் புஹாரி

தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரினால் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினரான பாரூக் பாயிஸ் இன்று செவ்வாய்கிழமை(08) தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக காலை 8.30 மணிக்கு திறக்கப்படும் குறித்த வைத்தியசாலையில் இன்று காலை 10.30 மணியாகியும் வைத்தியர் எவரும் சமூகமளிக்காத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ் வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்கள் கடமை புரிகின்ற நிலையில் ஒரு வைத்தியர் சுகயீனம் காரணமாக விடுமுறை பெற்று சென்றுள்ளதாகவும் மற்றைய வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கவில்லையெனவும் தாக்குதலுக்குள்ளான சிவில் பாதுகாப்பு உறுப்பினரிடம் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிவில் பாதுகாப்பு உறுப்பினர் தான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக  நோயாளிகளிடம் தெரவித்து வீடு திரும்பியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த வைத்தியர், வைத்தியசாலையில் தான் இருப்பதாகவும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினரை வைத்தியசாலைக்கு வருமாறும் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவரின் அழைப்பினை ஏற்று வைத்தியசாலைக்கு சென்ற சிவில் பாதுகாப்பு உறுப்பினரை நோயாளிகளை பார்வையிடும் இடத்தில் வைத்து வைத்தியர் தனது காலினால் உதைத்தாக சம்பவத்தை நேரில் பார்த்த நோயாளர்கள் தெரவித்துள்ளனர்.

இச் சம்பவத்தை அடுத்து, மூதூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன் மற்றும் தோப்பூர் பொலிஸ் காவலரண் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு நிலைமையை சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இததனையடுத்து  வைத்திய சேவை தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--