2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(09) நடைபெற்றது.

 பன்குடாவெளியில் உள்ள கிராம சேவையாளர் பணிமனையில் பிரிவுக் கிராம சேவையாளர் எஸ். கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் ஏறாவூர்ப் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன் கலந்து கொண்டார்.

கொடுவாமடு, பன்குடாவெளி மற்றும் வேப்பவெட்டுவான் ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த 23 மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய ஏறாவூர்ப் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர், பாதிப்பைப் பற்றியே தொடர்ந்து கூறிக்கொண்டிருக்காமல் முன்னேறுவது பற்றிச் சிந்திக்க வேண்டுமென் தெரிவித்துள்ளார்.
 
நிகழ்வில்  தொடர்ந்து உரையாற்றிய அவர்; ஆயுத வன்முறைகளினால் வறிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனினும் தொடர்ந்து பாதிப்பை பற்றியே பேசிக்கொண்டிருக்க முடியாது. அந்தப் பாதிப்புக்களிலிருந்து விடுபடும் வழிவகைகள் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
 
பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான பல வேலைத் திட்டங்களை அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அமுல்படுத்தி வருகின்றன.
 
இந்த வாய்ப்பை பாதிக்கப்பட்ட மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாதிப்பிலிருந்து மீள்வதற்காக வழங்கப்படுகின்ற எந்த உதவியையும் வீணாக செய்து விடக்கூடாது என்று குறிப்பிட்டார்.

பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டேவிட் சதானந்தன், கொடுவாமடு, பங்குடாவெளி மற்றும் வேப்பவெட்டுவான் கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக சிறுவர் நலன்புரி உத்தியோகத்தர்கள்  உட்பட பெற்றோர் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--