2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வலய கல்வி அலுவலக முகாமைத்துவ உதவியாளர் மீது தாக்குதல்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர், குறித்த வலய கல்வி அலுவலகத்தின் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) காலை 9.45 மணியளவில் அலுவலகத்தில் கடமையிலிருந்த தன்னை விரைவாக பணியை முடித்து தருமாறு கடுமையாக தாக்கியதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுந்தரமூர்த்தி ராஜ்கீதன் என்ற காயமடைந்த நபரிடம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதுடன், தாக்கிய நபரை கைது செய்வதற்காக தேடி வருவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--