2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ரயில் கடவையில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் இலங்கை மின்சாரசபை ஊழியரான கையூம் (வயது 37) என்பவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த இவர் உடனடியாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூம்ஆ தொழுகைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி  வந்த இவர், மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--