2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விசேட தேவையுடைய மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

 காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் விசேட தேவையுடைய குடும்பங்களை சேர்ந்த  சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பத்திற்கு சேவ்த சில்றன் அமைப்பு வெள்ளிக்கிழமை(11) துவிச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பவற்றை வழங்கியது.
காரைதீவு பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரின் சிபார்சின் பேரிலேயே குறித்த மாணவருக்கு பிரதேச செயலகத்தில் வைத்து இந்த உதவி வழங்கப்பட்டது.

இதன்போது பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன், நன்னடத்தை அலகு அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.வினோதினி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வி.விஜயதாஸ், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் கே.உருத்திரன், கிராம சேவை உத்தியோகத்தர் ரி.இராஜசேகர், சேவ்த சில்றன் திட்ட இணைப்பாளர் என்.நாகேஸ்வரன், திட்ட முகாமையாளர் எஸ்.பிரபாகரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--