2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனமொன்று வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக நுழைவாயிலை உடைத்துக்கொண்டு சென்றதால், கடமையிலிருந்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பிலிருந்து பாசிக்குடா நோக்கி வந்த இவ்வாகனம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது.
திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற இவ்விபத்தின்போது, வாகனத்திலிருந்த இருவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. இருப்பினும்,  துறைமுகத்தில் கடமையிலிருந்தவருக்கே சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வாகனத்திலிருந்தவர்கள்  மது அருந்தியிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--