2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஊஞ்சல் விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

தமிழரின்  பாரம்பரிய  பண்பாட்டு  விழுமியங்களை  அழியாமல்  பாதுகாக்கும் ஒரு நிகழ்வாக
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின்  அம்பிளாந்துறையில் ஊஞ்சல்  விழா  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செவியேறல்  ரீதியான ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டு 301  வருடம் பழமைவாய்ந்த  நிழல்வாகை  மரத்தில்  ஊஞ்சல்கட்டி  சிறுவர், பெரியோர் என்ற  வேற்றுமை  இன்றி கிராம மக்கள்  ஊஞ்சல்  ஆடினர்.

முற்காலத்தில் அம்பிளாந்துறையை ஆட்சிசெய்த சிற்றரசரான  அருமைக்குட்டிப் போடியார்  1776 ஆம் ஆண்டு காலப்பகுதியில்   ஊஞ்சல் கட்டி  ஆடிய மரமாக இந்த நிழல்  வாகை இருந்ததாக  வரலாறு  கூறுகின்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர்  பா.அரியநேத்திரன்  கலந்துகொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--