2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புதுவருட விளையாட்டு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோரகல்லிமடு யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமகரிஷி வித்தியாலய மைதானத்தில் விளையாட்டுக் கழக தலைவர் க.நந்தகோபன் தலைமையில் சனிக்கிழமை (19) இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார்;. அதிதிகளாக கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமகரிஷி வித்தியாலய அதிபர் நீ.ஆனந்தன், கோரகல்லிமடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ.ந.பத்மநாதன், கோரகல்லிமடு கிராம சேவை உத்தியோகத்தர் வி.வடிவேல், சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.த.கனிதேவி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.ரமேஸ், கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு தலையணைச் சமர், முட்டி உடைத்தல், பெண்களுக்கான மெதுவாக சைக்கிள் ஓட்டம், ஆண்களுக்கான மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், சிறுவர்களுக்கான ஓட்டம், ஆண், பெண்களுக்கான கயிறு இழுத்தல், விநோத உடைப் போட்டி உட்பட பல விளையாட்டுகள் இடம்பெற்றது.
 
போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிவர்களுக்கு அதிதிகளால் பரிசுகள் வழங்கப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனால்  இக் கிராமத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--