2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(22) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேச இளைஞர் கழகங்களைச்சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய இளைஞர்களும் இதில் இணைந்திருந்ததாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காத்தான்குடி இளைஞர் சேவைகள் அதிகாரி எஸ்.இலாஹி தெரிவித்தார்.

தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவர்களும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களும் இணைந்தே இவ்வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகம் மற்றும் வெளிப்பகுதி, உட்பகுதி உட்பட கல்லூரி முழுமுiயாக தூய்மைப்பத்தப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட இனங்காணப்பட்டு  அழிக்கப்பட்டன.

ஆரையம்பதி பிரதேச பொது சுகாதரா பரிசோதகர்களும் இவ்வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--