2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

தோணி கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளையடிமடு வாவியில் வியாழக்கிழமை (24)  தோணி கவிழ்ந்ததில் வெள்ளையடிமடு கிராமத்தைச் சேர்ந்த மீனவரான இராஜேந்திரா ரஜிகாந் (வயது 18) என்பவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டு வலையில் மீன்கள் பிடிபட்டுள்ளதாவென்று தோணியிலிருந்தவாறே இவர்  வலையை எடுத்துப் பார்க்க முற்பட்டபோது, இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட  விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  வாகரை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில்  விரிவான விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--