2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புதுவருட விளையாட்டு நிகழ்வுகள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி சமூர்த்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை(24) சிதிரைப் புதுவருடத்தை சிறப்பித்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், சறுக்குமரம் ஏறுதல், போன்ற கிராமிய பாரம்பரிய விளையாட்டுக்கள் இதன்போது இடம்பெற்றன.
இந் நிகழ்வில்  மாவட்ட சமூர்த்தி பிரதிப்பணிப்பாளர் பி.குணரெத்தினம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி வங்கி உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொதுமக்கள், சமூர்தி பயனாளிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--