2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பாலர் பாடசாலை சிறுவர்களின் கலை நிகழ்வு

Gavitha   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்,  'அன்பு செலுத்தி எம்மைப் பாதுகாக்கவும்' எனும் தொனிப்பொருளில் பாலர் பாடசாலை சிறுவர்களது கலை நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.உஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் வி. ஜெகதீசன் பிரதம அதிதியாகவும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திலகராணி கிருபைராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக நடைபெற்ற இந்நிகழவில், ஆலையடிவேம்பு பிரதேசதத்துக்குட்பட்ட பாலர் பாடசாலை சிறுவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும். சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில்  பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .