2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நாவற்குடாவில் நகைகளும் உடைமைகளும் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்திலுள்ள வீடொன்றின் கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்தவர்கள்,  34 இலட்சம்  ரூபாய் பெறுமதியான தங்கநகைகளையும் உடைமைகளையும் நேற்று புதன்கிழமை (15) கொள்ளையிட்டுச் சென்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 46 பவுண் தங்கநகைகள், ஒரு மடிக்கணினி, 2 கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மேலும்  பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்றையதினம் (15)  6.45 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு  உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு,  மீண்டும் வீட்டுக்கு திரும்பிவந்தபோது  வீட்டுக்கூரை  பிய்க்கப்பட்டு   கொள்ளையிடப்பட்டுள்ளதாக   குறித்த வீட்டு உரிமையாளர் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .