2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில்,  ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடுகாத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பத்ரிய்யா ஜும் ஆ பள்ளிவாயல் மண்டபத்தில் இன்று(18) காலை  ஆரம்பமானது.

இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ள மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையுடைய சுமார் 350 உலமாக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் மௌலவி ஏ.ஜே.அப்துர் றவூப் மிஸ்பாஹி, காத்தான்குடி நகர சபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம்  உட்பட இராணுவ உயரதிகாரிகள், பிரமுகர்கள் உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக தென்னிந்தியாவைச் சேர்ந்த உலமாக்களான சேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் மௌலவி பி.ஏ.ஹாஜாமுயீனுத்தீன் பாகவி, கலாநிதி முனைவர் எச்.முஜிபுர்றஹ்மான் ஆகியோரும் இலங்கையிலுள்ள அறபுக்கல்லூரிகளின் அதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டு நினைவுப்பதாகையை மௌலவி ஏ.ஜே.அப்துர் றவூப் மிஸ்பாஹி திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்த மாநாட்டின் ஆரம்ப வைபவத்தின் போது இலங்கை ஜனாதிபதி மற்றும் முப்படைகள், நாட்டு மக்கள் ஆகியோருக்கு ஆசி வேண்டி துஆ பிராத்தனையும் நடைபெற்றது.

இந்த மாநட்டில் இன்றும் நாளையும்; இஸ்லாமிய பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடுவதும் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களை ஒன்றினைத்து அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதும்  இஸ்லாமிய பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடுவதுபோன்ற விடயங்கள் நடைபெறுமென மாநட்டு ஏற்பாட்டுக்குழு உறுஞப்பினரும் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் செயலாளருமான மௌலவி கே.ஆர்.எம்.ஸஹ்லான் றப்பானி தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .