2021 மார்ச் 08, திங்கட்கிழமை

'முதியோர் உரிமைகளை பாதுகாத்தல், மேம்படுத்துதல் சமூகத்தின் மீதுள்ள கடப்பாடு'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முதியோர் உரிமைகளை பாதுகாத்தலும் மேம்படுத்துதலும் சமூகத்தின் மீதுள்ள கடப்பாடாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

சர்வதேச முதியோர் தினத்தை  சிறப்பிக்கும் வகையில் 'முதியோர் உரிமைகளை பாதுகாத்தலும் மேம்படுத்துதலும்' எனும் தொனிப்பொருளிலான   கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்  நேற்று  செவ்வாய்க்கிழமை (21) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'எமது நாட்டிலுள்ள முதியோர் நீண்ட ஆயுள் உடையவர்கள். இதனால்,  பல பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் இவர்கள் முகங்கொடுக்கின்றனர்.

இலங்கையிலுள்ள முதியோர் நலன்களை பாதுகாத்து முன்னேற்றுவதுடன், அவர்களை சுதந்திரமாகவும்; சுயமரியாதையுடனும்; கண்ணியத்துடனும் வாழச் செய்தல் வேண்டும்' எனக் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.அருளானந்தம் 'வயது முதிர்ச்சியும் சுகாதாரத் தேவைகளும்' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

'முதியோர் தொடர்பான சட்டம்' பற்றி சட்டத்தரணி மிருதினி சிறிஸ்குமாரும் 'சமூகப் பாதுகாப்பும் பராமரிப்பும்' எனும் தலைப்பில் சமூகசேவைகள் திணைக்கள அதிகாரி  செல்வநாயகமும்  'முதியோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள்' எனும் தலைப்பில் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சனும் கருத்துரை வழங்கினர்.

இந்தக் கலந்துரையாடலில் முதியோர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகள்,  அரசாங்க  உத்தியோகஸ்தர்கள், சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், முதியோர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர். 

இதன்போது, 09 உறுப்பினர்களை  கொண்ட முதியோர் செயற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .