2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தென்னங்கன்றுகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்கலடி, கொடுவாமடு, தம்பானம்வெளி, இலுப்படிச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு  4,000 உயர் ரக நல்லின தென்னங்கன்றுகள் இன்று புதன்கிழமை (22) விநியோகிக்கப்பட்டன.

பிரதேசத்துக்கும் காலநிலைக்கும் ஈடுகொடுக்கக்கூடிய ரீடி  எனப்படும் உயர்ரக நல்லின தென்னங்கன்றுகள் 06 வருடங்களில்  சிறந்த பயன் தரக்கூடியவையென்று மட்டக்களப்பு தெங்கு அபிவிருத்தி தென்னை பயிர்ச்செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் வசந்த பமுனுகொத்கே  தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு டிசெம்பர் மாதத்துக்கிடையில் 30,000 தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், தற்சமயம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுவருவதாக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.
மேலும்,  தென்னை வளர்ப்போருக்கு பல்வேறு நிவாரணங்களையும் மானியங்களையும் இன்னும் பல இலவச ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளையும் அரசாங்கம் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு தெங்கு அபிவிருத்தி தென்னை பயிர்ச்செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் வசந்த பமுனுகொத்கே, தெங்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ரீ.எம்.சாஜித், கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய கிளைச் செயலாளர் ஐ.லலீந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .