2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

'முதுகல்விமாணிக்கு விண்ணப்பிப்போர் முழுவிடுமுறை பெறவேண்டிய அவசியமில்லை'

Kogilavani   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகவுள்ள முதுகல்விமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் முழு விடுமுறை பெறவேண்டிய அவசியம் இல்லை' என கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா புதன்கிழமை(22) தெரிவித்தார்.

முதுகல்விமாணி கற்கைகளை பகுதி நேரம் கற்கவுள்ளோரும் பதிவுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்விமாணியை பூர்த்திசெய்த நிலையில் பாடசாலைகளில் ஆசிரியர்களாக தொழில்புரிந்துவருவோர், தமது தகைமையை அதிகரிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுகல்விமாணி கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக்கற்கை நெறியை தொடரவிரும்பும் ஆசிரியர்கள், இதற்காக பதிவுசெய்யும்போது ஒருவருட முழுநேர பாடசாலை விடுமுறை விடுகைப்பத்திரத்தை சமர்ப்பிக்கவேண்டும் என பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டிருந்தது.

எனினும் முழுநேர விடுமுறை விடுகையை வழங்க கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மறுப்பு தெரிவித்ததால் ஆசிரியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர்.

பகுதிநேர கற்கையை கற்கவேண்டும் என்பதற்காக பதிவுசெய்ய சென்றவர்களிடம் முழு விடுமுறை விடுகைபத்திரம் இல்லாத காரணத்தினால் பதிவுசெய்யமுடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜாவை தொடர்புகொண்டு கேட்டபோது,
'இது ஒரு சமூகப்பிரச்சினையாக உருவெடுத்தன் காரணமாக இதற்கு தீர்வு வழங்கவேண்டியுள்ளது.

தற்போது குறித்த பகுதிக்குரிய பீடாதிபதிக்கும் இதுதொடர்பில் அறிவித்துள்ளேன். பகுதி நேரமாக பதிவுசெய்ய வருவோரையும் அனுமதிக்கும்படி பணித்துள்ளேன்.

சனி,ஞாயிறு தினங்களில் முழுவதுமாக அவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளச்செய்யும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .