2021 மே 10, திங்கட்கிழமை

ஏ.ஐ.ஏ. காப்புறுதி நிறுவனத்தினால் வகுப்பறைக் கட்டடம்

Gavitha   / 2015 ஜனவரி 28 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்


கிழக்குப்பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வேண்டுகோளின் பேரில், ஏ.ஐ.ஏ. காப்புறுதி நிறுவனத்தினால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் 60 இலட்சம் பெறுமதியான வகுப்பறைக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.


இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.


இதில், இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதி பிரிகேடியர் தர்சண கெட்டியாராய்ச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


அத்துடன், மட்டக்களப்பு மேற்கு வலகக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிநேசன், பாடசாலை அதிபர் திருமதி எஸ்.ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X