2021 மே 15, சனிக்கிழமை

கல்குடா பிரதேசத்துக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக கூட்டம்

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்துக்கு குடிநீர் வழங்குவது தொடர்பான உயர் மட்டக்கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.


இதன்போது, கல்குடா பிரதேசத்துக்கு குடிநீர் வழங்குவது மற்றும் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மலக்கழிவுகளை கடலுக்கும் அனுப்பும் திட்டமான சூவலஸ் எனும் திட்டம் தொடர்பிலும் குளங்களின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.


இதற்கான திட்ட அறிக்கை சாத்தியக் கூற்றறிக்கைகள் என்பனவும் முன் வைக்கப்பட்டன.


புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .