2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'வெள்ள நிவாரண பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்'

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்; பற்று பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராம மக்களுக்கான வெள்ள நிவாரணப பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சாள்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஏறாவூர்ப் பற்று பிரதேசத்தின் ஏறாவூர் ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த 722 குடும்பங்களும் மிச்நகர் கிராமத்தில் 1,592 குடும்பங்களும் மீராகேணி கிராமத்தில் 1,582 குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்திருந்த போதிலும் இம் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இவ் விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள், கிழக்கு மாகாண சவபை பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து, இவர்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு இம் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் உலக உணவுத் திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ள பொருட்களையும் மேற்படி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளைஇ மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையினால் பாதிக்கப்பட்ட ஏனைய கிராம மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .