Princiya Dixci / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கடற்கரையில், சனிக்கிழமை (31) மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றங்களை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவின் (சொகோ) பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார்.
நேற்று காலை மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கடற்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் முதலைக் குடாவைச் சேர்ந்த தர்மலிங்கம் வசந்தகுமார் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago