2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கிராம உத்தியோகஸ்தரை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஆர்.ஜெயஸ்ரீராம்,ஜே.எப்.காமிலா  பேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாஞ்சோலை  207ஏ கிராம உத்தியோகஸ்தரை இடமாற்றுமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக  பொதுமக்கள் திங்கட்கிழமை (02) ஆர்ப்பாட்ட பேரணியில்  ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம்  மகஜரையும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்கள் கையளித்தனர்.

மேற்படி  கிராம உத்தியோகஸ்தருக்கு இடமாற்றம் வந்தபோதிலும், அவர் இடமாறிச் செல்லவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

'அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கிராம உத்தியோகஸ்தரை இடமாற்றுங்கள்', 'ஊரைக் குழப்பி மூட்டிவிடும் கிராம சேவகரே வெளியேறு', 'அநியாயம் செய்யும் கிராம உத்தியோகஸ்தரை nவிளியேற்று' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X