Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையில் கொழும்பில் திங்கட்கிழமை (02) விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் இதன்போது, இழுபறி நிலையிலுள்ள கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது பல விடயங்கள் ஆராயப்பட்டன.
இழுபறி நிலையிலுள்ள கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவி உள்ளிட்ட அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும் மாகாணசபை ஆட்சி அமைப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பல அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் எவ்வாறு செயற்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேல்;, செயலாளர் பூ.பிரசாந்தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆஷாத் மௌலானா ஆகியோர் கலந்துகொண்டனர்.
26 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago