2021 மே 10, திங்கட்கிழமை

காங்கேயனோடையிலிருந்து மட்டு. போதனா வைத்தியசாலைக்கு பஸ் சேவை ஆரம்பம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காங்கேயனோடைப் பிரதேசத்திலிருந்து மட்டு. போதனா வைத்தியசாலை வரை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சேவையொன்று புதன்கிழமை (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காங்கேயனோடை மீசான் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் இலங்கை போக்குவரத்துச் சபையின் காத்தான்குடி டிப்போவினாலேயே இந்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப வைபவம், மீசான் நிறுவனத்தின் தலைவர் எம்.நழீம் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு காங்கேயனோடை பள்ளிவாயில் முன்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை போக்குவரத்துச் சபையின் காத்தான்குடி டிப்போ முகாமையாளர் ஏ.முனீர், பிரதி முகாமையாளர் எம்.அன்சார், மீசான் நிறுவனத்தின் செயலாளர் எம்.எஸ்.சமீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த பஸ் சேவையானது தினமும் காலை 5.15 மணிக்கு காங்கேயனோடையிலிருந்து ஊர் வீதி வழியாக காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சென்றடையவுள்ளது.

தினமும் இரண்டு வழிப்போக்குவரத்தாக 14 சேவைகள் இடம்பெறுவதுடன் இதற்கு ஒரு வழிக்கட்டணமாக 34 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் காத்தான்குடி டிப்போ முகாமையாளர் ஏ.முனீர் தெரிவித்தார்.

இந்த பஸ் சேவையானது 12 வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X